இருவர் மட்டுமே இருக்கும் வீடு
கடைச்சாவியை எடுத்து சட்டைப்பையில் வைக்கச் சொன்னான் பாபு.
சங்கவி மறந்து விட்டாள்
கிளம்பும்போது
சட்டைப்பையைக் கவனித்தது நல்லதாகப் போயிற்று. சங்கவியிடம் பொறுமையாகத்தான் கேட்டான்.
ஆறுமாதங்கள்தான்
ஆகியிருக்கும் திருமணமாகி
அதற்குள் ஆயிரத்தெட்டு சண்டை.
வீட்டில் அவன் செய்யும் ஒரே வேலை 'அது ஒன்றுதான்' என்பது போல கோபமாகப் பேசினாள்.
பதிலுக்கு அவன்
பேச வாக்குவாதம் முற்றிவிட்டது.
மாலை திரும்பியவன் அவள் முகத்தைத் திருப்பியபடி வைத்துவிட்டுப்
போன காபியைப் பருகியபடி சிந்தித்தான்.
இருவர் மட்டுமே இருக்கும் வீட்டில் இப்படி முகத்தைத்
திருப்பிக் கொணடால் யாரிடம் பேசுவது?
இதற்குத்
தீர்வு இல்லாமல் போய்விடுமே?
தன்னிடம்
உள்ள பத்து குறைகளை ஒரு தாளில் எழுதி அவளும், அவனிடம் உள்ள குறைகளை அவளும் எழுதிக்
காட்டினால் திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்குமே?
சண்டைக்கு இடமில்லாமல் போய்விடுமே?
சங்கவியை
அழைத்தான். முதலில் மறுப்பு
தெரிவித்த பின், சம்மதித்தாள். அவன் எழுதி முடித்தபின் நிமிர்ந்து
பார்த்தால், அவள் இன்னும் எழுதிக்கொண்டிருந்தாள்.
பொறுமையிழந்தான்.“நான் எழுதிட்டேன்
இந்தா அதைக்கொடு” தாளைப் படித்தவன் அதிர்ச்சியாகி விட்டான்.
தாள் முழுக்க ஐ.லவ்.யூ . பாபுவுக்கு என்னவோ புரிந்தது
டாக்டர்.ஜவாஹர் பிரேமலதா.
டாக்டர்.ஜவாஹர் பிரேமலதா.
No comments:
Post a Comment